கட்டுரை, கருத்தறிதல்

கட்டுரை 
உயர்நிலை 1 

பின்வரும் கட்டுரைக் குறிப்புகளைக் கவனமாகப்  படித்துவிட்டு, ஒரு கட்டுரை எழுதவும். (120 சொற்கள்)


என் குடும்பம் 

முன்னுரை 
Ø குடும்பம் என்பது என்ன
Ø தாய் தந்தை  பற்றிய இனிய தொடர்கள் 
Ø அதன் அவசியம் 
உடல் 
பத்தி 1  
முதலில் தந்தையைப் பற்றி எழுதவும்
முழு விவரம் 

பத்தி 2 
தாய் 
பழமொழி மற்றும் அவரைப் பற்றிய விவரம் 

உடன் பிறந்தவர்கள் 
சகே தரன்  சகே தரி 
அவர்களைப் பற்றிய விவரங்கள் 
படிப்பு
குணம்
உன்னை பற்றிய விவரம் 
உன் குணம்
விருப்பம் 

முடிவுரை 
ஆகவே குடும்பம் என்பது தந்தைதாய் மற்றும்  பல குடும்ப உறுப்பினர்களைக் கொண்டதே ஆகும்அதில் உள்ளவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் இனிய எண்ணத்தே டும் இருந்தால் அந்தக் குடும்பம் ஒரு பல்கலைக் கழமாக விளங்கும் என்று கூறலாம் அல்லவா?      கட்டுரை 2 

25,9. 15

இந்த குறிப்புகளைப் படித்துவிட்டு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் ஒரு கட்டுரை எழுதவும். 


கல்வி. அது நமது கண்கள்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அறிது
அதனினும் அரிது கூன்,குருடு,செவிடு,
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
                                  என்று மொழிந்துள்ளார் ஒளவை மூதாட்டி. இத்தகைய  அரிதான மானிடர்கள் இந்த உலகில் தோன்றி வாழ்ந்து வரும் வாழ்க்கையில் புகழுடன் வாழ வேண்டியது அவசியம். அதனால்தால் புலவன் ஒருவன்,

உன் தலையை புகழால் அலங்கரி
மகுடங்களால் அல்ல
ஏனென்றால் மகுடங்கள்
தலை மாறக் கூடியவை.
                                  என்று கூறினான்.நீங்காத புகழ்பெற வாய்ப்பமைத்துக் கொடுப்பதே கல்வி மட்டும்தான். இத்தகைய கல்வியைப் பெற கூடிய இம்தான் பள்ளி அறை. பள்ளி அறை என்றால் இருபொருளுண்டு. ஒன்று பாடம் படிக்கும் இடம், மற்றொன்று தூங்கும் இடம். இரண்டிற்கும் தமிழ் மக்கள் ஒரே பெயரை வைத்து மகிழ்ந்தது ஏன்?
கல்வியால் வளர்வது அறிவு. தூக்கத்தால் வளர்வது உடல். இரு வளர்ச்சியும் தேவை. உடலின் வளர்ச்சியே வாழ்வின் வளர்ச்சி. அறிவின் வளர்ச்சியோ உயர்வின் வளர்ச்சி ஆகும். ஆகவே இரண்டின் வளர்ச்சிக்கும் காரணமான இடம் பள்ளி அறை.  

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

என்கிறார் வான் புகழ் வள்ளுவர். ஒரு பிறவியில் கற்கும் கல்வி 7 பிறவியிலும் சென்ற உதவும். அதனால்தான் இந்தப் பிறவியில் கற்க வேண்டும். வாழ்க்கை கல்வி,வாழ்க்கைக்கு கல்வி, வாழ்நாள் கல்வி என்றெல்லாம் பேசப்படுவதே இந்தக் கல்வி ஒருவனை உயர்த்தி வாழ்வில் நன்மைகளைக் காட்டிடும் என்பதாலேயே.
கல்வி கற்கவே இறைவன் இரு கண்களை நமக்கு தந்துள்ளார்.
இதனை பொய்யாமொழிப் புலவர்,
கண்ணுடையோர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையார் கல்லாத வரே
என்கிறார்.
கற்பவர்கள் முகத்திலிருப்பதே கண்கள். கல்லாதவர் முகத்திலிருப்பது புண்கள் என்பதே இதன் பொருளாகும். விலங்குகளுக்கும் கண்கள் உண்டு. பார்க்க மட்டுமே அவை பயன்படுகின்றன. ஆனால் மனிதர்களின் கல்களே படிக்கவும் பார்க்கவும் பயன்படும். ஆகவே நாம் கற்போம் ,மற்றவரயும் கற்க வைப்போம்.
  கட்டுரை எழுத இனிய தொடர்கள். நீதி நூல்  - நல்வழி

1.  வரவறிந்து செலவிட வேண்டும்.
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

2.  பசிவந்திட பத்தும் பறக்கும்
மானம் குலக்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி,தாளாண்மை, தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்

3.  பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை
கல்லானே ஆனாலும் கைபொருளொன்று உண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர், இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்று ஈடுறெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயிற் சொல்

4.  உரைத்தாலும் பேதை உணரான்
பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே, தூவா
விரைத்தாலும் நன்றாக வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா துணர்வு


நறுந்தொகை
5.   எழுத்தறி வித்தவன் இறைவன் ஆவான்

6.   சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது

7.   பெருமையும் சிறுமையும் தான்தர வருமே

8.   கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

9.   எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியிற் கற்றோரை மேல் வருக என்பர்

10.        அச்சமும் நாணமும் அறிவிலோர்க்கு இல்லை

11.        கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில்

கடும்புலி வாழும் காடு நன்றே


12.         பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்
மெய்போலுமே மெய்போலுமே

13.        மெய்யுடை ஒருவன் சொலமாட் டாமையால்
பொய் போலுமே பொய் போலுமே

14.        துணையோடு அல்லது நெடுவழி போகேல்


மூதுரை

1.  பயன் கருதாது அறம் செய்க.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்  அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டாம் / நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரை
தலையாலே தான் தருத லால்

2.  அறிவு செல்வம்

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு
3.  நல்லார் தொடர்பின் நலம்
நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லாற்சொல் கேட்பதுவும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பவும் நன்றே

4.  அடக்கத்தின் சிறப்பு
அடக்க முடையார் அறிவிலார் என்றெண்ணி
கடக்க்க் கருதவும் வேண்டா, மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு

5.  உண்மையான உறவு
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல
உற்றழித் தீர்வார் உறவல்லர், அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

6.  அரசனும் அறிஞனும்
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன், மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோருக்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.         


  

No comments:

Post a Comment